சிதலமடைந்த கோபாலகிருஷ்ண ஸ்வாமி கோயில் / மீட்டெடுக்கிறார் ஸ்ரீ வேதவர்த்தன தீர்த்தர்
உடுப்பியின் அஷ்ட மடங்களில், ஷிரூர் மடம் தனக்கே உரிய தனித்துவத்தை கொண்டு சிறப்பாக செயலாற்றி வருகிறது. ஷிரூர் மடத்தின் முதல் ஸ்வாமியான ஸ்ரீ வாமன தீர்த்தர், ஸ்ரீ வாதிராஜரின் "ஜெய மத்வவல்லபா..." பாடலின்படி, ஒரு சிறந்த அறிஞர், தபஸ்வி. இந்த மடம், பரந்த சொத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் ஷிரூரில் உள்ள மூல மடத்திற்கு சொந்தமான ஹனுமான் கோவில், ஹிரியட்காவிற்கு அப்பால், உடுப்பியிலிருந்து சுமார் 30 நிமிடங்களில் பயணித்தால் அடைந்துவிடலாம். இந்த ஹனுமான் கோவில், பல பக்தர்களால் பெரிதும் ஈர்த்து வருகிறது.
ஜபாலி முனிவர் என்னும் முனிவர், இங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது இருப்பைக் குறிக்கும் வகையில் ஹனுமான் சன்னதிக்கு எதிரே கல்லில் ஒரு சிறிய பீடம் எழுப்பப்பட்டுள்ளது. தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ வேதவர்த்தன தீர்த்த சுவாமிகள், மிகவும் சுறுசுறுப்பாக, மத்வ மக்களுக்காக பல நல்ல செயல்களை செய்து வருகிறார். கடுமையான ஜபம் மற்றும் விரிவான பூஜை முறைகளைத் தவிர ஸ்வாமிஜி, சமூகம் சார்ந்த பல நன்மைகளை செய்ய ஆயத்தமாக, முழுவீச்சில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
அதன் படி, மத்வ மக்களுக்காக, ஹிரியட்காவில் உள்ள ஷிரூர் மடத்தின் ஒரு பிரிவான பபுஜே மடத்தை புதுப்பிக்க அவர் முடிவு செய்துள்ளார்.(இங்குதான் அந்த அனுமார் கோவிலும் உள்ளது). மேலும், இதற்கான புனர்பிரதிஷ்டே விழா கடந்த ஏப்ரல் 22 அன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பபுஜே மடத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:
300 ஆண்டுகளுக்கு முன்பு, ஷிரூர் மடத்தின் அப்போதைய பீடாதிபதி ஸ்ரீ லக்ஷ்மிபதி தீர்த்தர், கர்நாடக மாநிலம், பபூஜே என்னும் இடத்தில் ஒரு இரவு பொழுதை அங்கேயே தங்க நேரிட்டது. அப்போது அவர் கனவில் கோபாலகிருஷ்ண பகவான் தோன்றி, புல்லாங்குழல் வாசித்து, முன்னோரு காலத்தில் என்னை பிரம்மாண்டமாக வழிபடப்பட்டு வந்ததாகவும், அந்த இடம் ஒரு கோயிலாகவும், அருகிலேயே ஒரு அக்ரஹாரமாகவும், ஒரு மன்னரின் பராமரிப்பில் இருந்ததாகவும் பகவான் கூறியிருக்கிறார்.
அதன் பின்னர், நிலைமை மாறின. உள்ளூர் பிராமணர்களும், பெண்களும் மொகலாயர்களின் படையெடுப்பால் கொல்லப்பட்டனர். பூஜைகள் நிறுத்தப்பட்டன. கோயில் சிதிலமடைந்து சிலை பூமிக்குள் சென்றது. தற்போது, பாம்புகள் வசிக்கும் மண் மேட்டிலும், எறும்பு மலையிலும் தான் வசிப்பதாக கோபாலகிருஷ்ணர் கனவில் கூறினார். திடுக்கிட்டு எழுந்த ஸ்ரீலக்ஷ்மிபதி தீர்த்தர், கோபாலகிருஷ்ணர் கூறியதை போல் அந்த இடத்திற்கு சென்று, கோபாலகிருஷ்ணரை கண்டேடுத்தார். பின், அந்த இடத்தை புதுப்பிக்க முடிவு செய்தார்.
பபுஜேயில் உள்ள உள்ளூர்வாசிகள் இதற்காக நிலம் கொடுத்தனர். ஸ்வாமிஜி ஒரு கோவிலைக் கட்டி, அங்கு நீண்ட காலம் தங்கி, 1720ல் பத்ரபாத சுக்ல தசமி அன்று பிருந்தாவன பிரவேசமானார். அவரது பிருந்தாவனம் இன்றும் உள்ளது. சில காரணங்களால், கடந்த 25 ஆண்டுகளாக, பபூஜேயில் முறையான பூஜைகள் நடைபெறாததால், கோபாலகிருஷ்ணர், கலியமர்த்தன கோபாலகிருஷ்ணர், ஸ்ரீசக்ரா சிலைகள் உடுப்பியில் உள்ள ஷிரூர் மட வளாகத்திற்கு மாற்றப்பட்டு, தினமும் சகல பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.
பப்புஜே மடம் பல ஆண்டுகளாக பாழடைந்த தோற்றத்துடன் காணப்பட்டது மற்றும் அந்த இடத்திற்கு சரியான அணுகுமுறை இல்லை. இப்போது ஸ்ரீ வேதவர்தன தீர்த்த சுவாமிகள் அங்கு ஜீர்ணோதரா / சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, அந்த இடத்தின் மகிமையை மீட்டெடுக்க முயற்சியினை மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக கிட்டத்தட்ட சுமார் ரூ. 1 கோடி செலவீடப்பட உள்ளது.
கூரை: ரூ. 10 லட்சம், சுவர் பழுது: ரூ. 10 லட்சம், கிரானைட் தளம்: ரூ. 25 லட்சம், உள்பிரகாரத்திற்கு: ரூ. 5 லட்சம், யாகசாலை கட்டுமானம்: ரூ. 5 லட்சம், வளாக சுவர்: ரூ. 15 லட்சம், சரோவரா கட்டுமானம்: ரூ. 5 லட்சம், நாகபனா, பிருந்தாவனம் பழுது: ரூ. 5 லட்சம், இன்டர்லாக் தளம்: ரூ. 10 லட்சம், மற்ற பணிகள்: ரூ. 10 லட்சம்.
நன்கொடைகளை அனுப்ப விரும்புவோர்: ஸ்ரீ ஷிரூர் மடம் உடுப்பி; கர்நாடக வங்கி; கணக்கு எண் 8022500102234401; கார் தெரு கிளை; IFSC KARB0000802.
உடுப்பியில் உள்ள ஷிரூர் மடத்தின் திட்டங்கள் பற்றிய மேலும் தகவலுக்கு: கடேகர் ஸ்ரீஷா பட்: 9900025432
தேதி: 25.04.2024
தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
கருத்துகள்
கருத்துரையிடுக